• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய தொழிற்துறை வளர்ச்சி
  2010-12-10 16:53:09  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய தொழிற்துறை வளர்ச்சி கடந்த அக்டோபர் திங்களில் மீண்டும் அதிகரித்ததாக இந்திய நடுவண் புள்ளிவிபர அலுவலகம் அறிவித்தது. 2009ம் ஆண்டின் அக்டோபர் திங்களின் தொழிற்துறை வளர்ச்சியை விட இவ்வாண்டு 10.8 விழுக்காடு அதிகரிப்பு பதிவாகியது.

ஜூலை திங்கள் முதல் பெருமளவு ஏற்ற இறக்கங்களை கண்ட பின், அக்டோபர் திங்களில் தொழிற்துறை வளர்ச்சி பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டதை விட கூடுதலாக 8.5 விழுக்காட்டு வளர்ச்சியை பதிவு செய்தது.

சுரங்கத்தொழில், தயாரிப்புத் தொழில் மற்றும் மின்னாற்றல் துறைகளில் முறையே 6.5, 11.3 மற்றும் 8.8 விழுக்காடு என்ற ஆண்டு வளர்ச்சி நிலை பதிவாகியுள்ளது. நுகர்வுப்பொருள் சார்ந்த வளர்ச்சி செப்டம்பரிலிருந்த 10.9 விழுக்காட்டிலிருந்து அக்டோபரில் 31 விழுக்காடாக பதிவானது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040