இருதரப்புறவிலும் பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளிலும், இருநாடுகளின் நலன் கலப்பு சாரம்ச பயன்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
அடிப்படை வசதிகளின் கட்டுமானம் இந்தியா எதிர்நோக்கும் முக்கிய அறைகூவலாகும். சீன நிறுவனங்கள் வழங்கும் சேவை, விலை தரம் மற்றும் பொருள் புழக்கத் துறையில் பெரிதும் மேம்பாடுடையது. இந்திய சந்தையின் தேவையை இது நிறைவேற்ற முடியும். மேலும், BRIC நாடுகள், 20 நாடுகள் குழு முதலிய அமைப்புகளில் இந்தியாவும் சீனாவும் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. இருநாடுகளின் கூட்டு நலன் கலப்புக்கு இது மிக நல்ல எடுத்துக்காட்டு என்று Jaishankar குறிப்பிட்டார்.