
கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் சீனா செய்துள்ள முதலீட்டுத் தொகை சுமார் 22 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. உலக தரவரிசையில், சீனா 18வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு உயர்ந்து, வெளிநாடுகளில் முதலீடு செய்யும் மேம்பட்ட நாடுகளின் அணியில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாவ்ஜியன் 15ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இதைக் கூறினார்.
சீனாவின் ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஸ்வீடன் முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீனா முக்கியமாக நேரடி முதலீடு செய்து வருகிறது. வணிகச் சேவை, போக்குவரத்து, தயாரிப்புத் தொழில் முதலிவற்றில், சுமார் 90 விழுக்காட்டு முதலீட்டுத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று யாவ்ஜியன் கூறினார்.