சீன தலைமைமையமைச்சர் வென்ச்சியாபாவ் டிசம்பர் 15ம் முதல் 19ம் நாள் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்வார். இவ்விரு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்புறவை முன்னேற்றுவது, தெற்காசிய பிரதேசத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும் என்று சீன தெற்காசிய பிரச்சினை நிபுணர் sun shihai தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் இரு தரப்புகளிடையில் மேலதிக ஒன்று மற்ற தரப்பிடை நம்பிக்கையை உருவாக்குவது, வென்ச்சியாபாவின் இந்திய பயணத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இருநாடுகளும் விரைவாக வளர்கின்ற வளரும் நாடுகளாகும். அவை, ஒரு அமைதியான நட்பான அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சூழ்நிலை இவற்றுக்கு தேவை. ஆனால், இரு நாடுகளிடையில் இரு தரப்பிடை நம்பிக்கை பற்றாக்குறை இருந்தால் அது இரு தரப்புறவின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று அவர் கூறினார்.
பயணத்தின் போது வென்ச்சியாபாவ் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, இரு தரப்புறவு குறித்து முக்கிய உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது.
வென்ச்சியாபாவின் பயணத்தின் இன்னொரு இலக்கு நாடு பாகிஸ்தான். பாதுகாப்புப் பிரச்சினை அந்நாடு எதிர்நோக்கும் கடுமையான அறைகூவலாகும். சமூகப் பொருளாதாரத்தின் சீரற்ற வளர்ச்சி இப்பிரச்சினையின் அடிப்படை காரணமாகும். எனவே, பாகிஸ்தான் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு சீனா மேலதிக உதவி வழங்கும் என்று sun shihai கருத்து தெரிவித்தார்.
பயணத்தின் போது இரு நாடுகளின் வணிக ஒத்துழைப்பு உச்சி மாநாடும் நடைபெறும். சீனா, வர்த்தக முதலீட்டுக் குழுவை ஏற்பாடு செய்துள்ளது. இரு நாட்டுத் தொழில்நிறுவனங்கள் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை உருவாக்கும் என்று தெரிகிறது.
தெற்காசியா, சீனாவின் சுமூக அண்டை நாட்டு தூதாண்மையின் முக்கிய ஒரு பகுதியாகும். இது பற்றி sun shihai கூறியதாவது
அண்டை நாடுகளுடனான உறவு ஒரு நிதானமான அடிப்படை பெற்றால் தான், சீனா சர்வதேசத்தில் மேலதிக பங்கு ஆற்ற முடியும் என்று அவர் கூறினார்.




அனுப்புதல்













