அடுத்த ஆண்டில் அரசின் கோரிக்கையின்படி இப்பள்ளி சீன மொழியை வெளிநாட்டு மொழி கல்வியில் சேர்க்கும். மாணவர்களின் பிரதிநிதிகள், சீன பண்பாட்டை அறிந்து கொண்டு கற்றுக் கொள்ளும் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் பள்ளி சீன-இந்திய இளைஞர்களிடை பரிமாற்றத்தில் ஆக்கமுடன் கலந்து கொள்வதை வென்சியாபாவ் வெகுவாக பாராட்டியதோடு, இப்பள்ளிக்கு சீன மொழி புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் சீன பாரம்பரிய கையெழுத்து கலைவடிவத்தில்"சீன இந்திய நட்புறவு" என்ற 4 சீன எழுத்துக்களை வென்ச்சியாபாவ் எழுதினார்.