6வது சீன-தெற்காசிய வணிக கருத்தரங்கின் ஏற்பாட்டுக் கூட்டம் 16ம் நாள் குவன்மிங் நகரில் நடைபெற்றது. தெற்காசிய நாடுகள் கூட்டணியின் தொழில் மற்றும் வணிக சங்கம், நேபாள தொழில் மற்றும் வணிக சம்மேளனம், இந்திய-சீன ஒத்துழைப்பு முன்னேற்ற மையம், இலங்கையின் செய்லொன் வணிக சங்கம் முதலிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் சீன வர்த்தக முன்னேற்ற சங்கம் மற்றும் யுன்னான் மாநிலத்தின் நிபுணர்களும் ஒன்று சேர்ந்து, அடுத்த ஆண்டு குவன்மிங்கில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்வதை பற்றி விவரித்தனர்.
சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடை வர்த்தகம் மற்றும் முதலீடு என்பது, 6வது கருத்தரங்கின் தலைப்பாக அறிவிக்கப்பட்டது.