தென்னாப்பிரிக்கா BRIC நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சேர்வதற்கு, ரஷியா வரவேற்ப்பு தெரிவித்தது என்றும், இவ்வொத்துழைப்பு அமைப்பு முறையின் அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்கு இது உதவி புரியும் என்றும், ரஷிய வெளியுறவு அமைச்சகம் 29ம் நாள் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவை ஆக்கப்பூர்வமான உறுப்பு நாடாக, BRIC ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சேர்த்துக்கொள்ள, சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளும் கலந்தாய்வு மூலம் ஒருமனதாகத் தீர்மானம் செய்தன என்று சீன வெளியுறவு அமைச்சர் யான் ஜியெ ச்சி 23ம் நாள் தெரிவித்தார்.