CIBN எனப்படும் சீனச் சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை 18ம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. ஏறக்குறைய 70 ஆண்டுகால வளர்ச்சி வரலாறுடைய சீன வானொலி நிலையம் புதிய செய்தி ஊடகத்தில் நுழைந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
இணையம், செல்லிடத்தொலைத்தொடர்பு உள்ளிட்ட நவீனமான புதிய உயர் நிலை தொழில் நுட்பங்களின் மூலமாக, பல மொழிகள், வசதிகள் ஆகியவற்றின் வடிவங்களில், CIBN உலகிற்கு பரப்புரை செய்யும். நவீனம், பன்னோக்கு, புதிய ரகம் ஆகிய தனிச்சிறப்புகளுடைய சர்வதேச ஊடகத்தை அமைப்பதில் சீன வானொலி பெற்ற சாதனைகளில், CIBN-இன் உருவாக்கம் ஒன்றாகும்.
சீன வானொலி நிலையத்தின் தலைமை இயக்குநர் வாங்கங்நியன் துவக்க விழாவில் உரைநிகழ்த்தியபோது இவ்வாறு தெரிவித்தார்.