• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் CIBN உருவாக்கம்
  2011-01-18 22:06:10  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை 18ம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஏறக்குறைய 70 ஆண்டுகால வளர்ச்சி வரலாறுடைய சீன வானொலி நிலையம் புதிய செய்தி ஊடகப் பாதையில் நுழைந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

61 மொழிகளில் ஒலிப்பரப்பு, பல்லூ ஊடங்கள், சர்வதேச தனிச்சிறப்பியல்பு ஆகியவற்றைக் கொள்கின்ற இந்த சர்வதேச ஊடக வலையமைப்பு பன்முகங்களிலும் துவங்கியது. சீன அரசவை செய்தி அலுவலகத்தின் துணைத் தலைவர், சீனத் தேசிய வானொலி, தொலைக்காட்சித் தலைமை ஆணையத்தின் துணைத் தலைவர், செய்தி ஊடக மற்றும் தகவல்தொழில் நுட்பத் துறையினர், சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தின் அலுலவர்கள் முதலிய 100க்கு மேற்பட்ட விருந்தினர் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இணையம், செல்லிடத்தொலைத்தொடர்பு உள்ளிட்ட நவீனமான புதிய உயர் நிலை தொழில் நுட்பங்களின் மூலமாக, பல மொழிகள், வசதிகள் ஆகியவற்றின் வடிவங்களில், CIBN தனது சேவைகளை உலகிற்கு பரப்புரை செய்யும். நவீனம், பன்னோக்கு, புதிய ரகம் ஆகிய தனிச்சிறப்புகளுடைய சர்வதேச ஊடகத்தை அமைப்பதில் சீன வானொலி பெற்ற சாதனைகளில், CIBN-இன் உருவாக்கம் ஒன்றாகும். சீன வானொலி நிலையத்தின் தலைமை இயக்குநர் வாங்கங்நியன் துவக்க விழாவில் உரைநிகழ்த்தியபோது இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது

சீனாவையும் உலகத்தையும் இணைக்கும் புதிய சர்வதேச ஊடக மேடையான இந்த சேவையில், "சீனாவின் நிலைப்பாடு, உலகின் பார்வை, மனிதகுலத்தின் விருப்பம் " என்ற பரப்புரைக் கண்ணோட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. சீன வானொலி நிலையத்தின் மனித ஆற்றல் வளங்களை பயன்படுத்தி, இணையத் தொலைக்காட்சி, செல்லிடப்பேசித் தொலைக்காட்சி உள்ளிட்ட புதிய ஊடகங்களை பெரிதும் வளர்க்கப் போவதாக அவர் கூறினார்.

CIBN எனப்படும் சீனச் சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை, சீனாவில் பல்வகை மொழிகள், மற்றும் பல்லூடக அலுவல்களை கொள்கின்ற முதலாவது சர்வதேச ஊடக நிறுவமாகும்.

இத்தகைய சேவை, பயன்பாட்டாளர்களுக்கு வேறுபட்ட அனுபவங்களை கொண்டு வரும்.

CIBNயின் உருவாக்கம், புதிய ஊடகத்தின் வளர்ச்சியின் தேவைக்கு பொருந்தியதாக உள்ளது என்று சீன வானொலி நிலையத்தின் துணைத் தலைமைப் பதிப்பாசிரியார் மாவ்வெய்கோன் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

உலகளவிய பார்வையில், செய்தி ஊடகத்தின் வளர்ச்சி வரலாற்றில், தகவல் தொழில் நுட்பத்தின் புரட்சியுடன், பாரம்பரிய செய்தி ஊடகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை மாற்றி வளர்ச்சி வாய்ப்பை காண முயல வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040