2010ஆம் ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 420 கோடி அமெரிக்க டாலராகும் என்று ஜப்பான் 14ம் நாள் தெரிவித்தது.
ஜனவரி திங்கள் சீனா வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, 2010ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 87 ஆயிரத்து 860 கோடி அமெரிக்க டாலராகும். ஜப்பானுக்குப் பதிலாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா மாறியுள்ளது என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2010ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜப்பானிய மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, மூன்றாவது காலாண்டில் இருந்ததை விட 0.3 விழுக்காடு குறைந்தது. தனிநபர் நுகர்வும், ஏற்றுமதித்தொகையும் 0.7 விழுக்காடு குறைந்தது, இதற்கு முக்கிய காரணமாகும்.




அனுப்புதல்













