கடந்த ஆண்டு தொடக்கம் உணவு விலை வேகமாக உயர்ந்ததால், வளரும் நாடுகளில் மேலதிக 4கோடியே 40லட்சம் மக்கள் வறிய நிலையில் சிக்கியுள்ளதாக உலக வங்கி 15ம் நாள் அறிவித்தது ஐ.நாவின் செய்தி இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, உலக உணவு பாதுகாப்பு நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. உணவுப் பிரச்சினை, உலகளவிய பிரச்சினையாக மாறியுள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கடும் அறைகூவல்களை எதிர்கொள்கின்றன. உணவுப் பற்றாக்குறையால், நாள்தோறும் ஏறக்குறைய 100கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக உலக வங்கியின் நிரந்தர துணைத் தலைவர் என்கோசி ஒகோன்ஜோ ஈவியலா தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய, பல்வேறு நாடுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.




அனுப்புதல்













