சர்வதேச உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்ததன் விளைவாக, ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. மிக வேகமாக விலை உயர்வதால் ஏற்படும் கடும் அறைகூவல்களை சமாளிக்க, பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென உலக வங்கியின் தலைவர் ராபர்ட் பி சோலிக் 15ம் நாள் கூறினார்.
ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது உலக வங்கியின் சர்வதேச உணவு விலைவாசிக் குறியீடு 29விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரையான சில திங்களில் மட்டும், இந்தக் குறியீடு 15விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இவ்வங்கி அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.




அனுப்புதல்













