• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனராக இருப்பதில் பெருமை
  2011-02-28 11:22:15  cri எழுத்தின் அளவு:  A A A   

பிப்ரவரி 26ம் நாள் காலை, கிரேக்கத்திலுள்ள சீன தூதரகம் வாடகைக்கு அமர்த்திய கப்பல் ஏற்றிச்சென்ற 2வது தொகுதி சீனர்கள், கிரேதே தீவைச் சென்றடைந்தனர். 2898 சீனர்களில் yang என்பவரும் ஒருவர்.

Yangற்கு வயது 48. 2010ம் ஆண்டு ஜூலை 2ம் நாள் முதல், அவர் லிபியாவில் வேலை செய்து வருகிறார். திட்டப்படி, இன்னும் 4 திங்கள் காலம் வேலை செய்த பிறகு அவர் சீனாவுக்கு திரும்புவார். லிபியாவின் குழப்பமான நிலைமை குறித்து, அவர் கூறியதாவது—

17ம் நாள் முதல் நிலைமை தீவிரமாகத் துவங்கியது என்று உணர்ந்தேன். எங்கள் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் சூறையாடப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

yangகின் உணர்வு, லிபியாவிலுள்ள சீனர் பெரும்பாலானோரின் உணர்வுக்கு ஒன்று தான். ஆனால், yang தாங்கியிருந்த நிறுவனம் கொள்ளையடிக்கப்பட வில்லை. தொலைகாட்சி மூலம், லிபியாவிலுள்ள சீனர்களை மீட்க, சீன அரசு ஏற்பாடு செய்ததை பார்த்த பிறகு, அவரது கவலை நீங்கியது. அவர் கூறியதாவது— 

நாங்கள் தொலைக்காட்சி மூலம், செய்திகளை பார்த்தோம். எங்களை மீட்பதற்கு, சீன அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இதை பார்த்த பிறகு, என் கவலை நீங்கியது என்றார் yang.

கவலையின்ற தாம், வெளியேறும் நாளை yang எதிர்பார்த்து காத்திருந்தார். சீன அரசு, கப்பல் மூலம், அவர்களை கிரேக்கத்துக்கு அனுப்பும் செய்தி, விரைவில் அவருக்கு தெரிய வந்தது.
அவர் கூறியதாவது—

தாய்நாடு கப்பல் மூலம், எங்களை கிரேக்கத்துக்கு அனுப்பும் செய்தியை, 23ம் நாள் இரவு தொலைக்காட்சி மூலம், தெரிந்து கொண்டோம். குறைந்தது 10 நாட்களுக்கு பிறகு புறப்படலாம் என்று நினைத்தோம். ஆனால், 24ம் நாள் அதிகாலை 3 மணிக்கு, புறப்படும் செய்தியை நாங்கள் பெற்றோம் என்று yang கூறினார்.
கப்பலில் இருந்தபடி yang, குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டார். அவர் கூறியதாவது—

லிபியாவில் தொலைபேசி வசதி கிடைக்க வில்லை. கப்பலில் எனக்கு செல்லிடபேசி அலைவரிசை கிடைத்தது. சீன தூதரகத்தின் பணியாளர்கள் எங்களுக்கு செல்லிட பேசி அட்டையை அளித்தனர். குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது என்றார் அவர்.

20 மணி நேர பயணத்துக்கு பிறகு, yang கிரேக்கத்தின் க்ரேதே தீவின் ஹெரக்லியோன் துறைமுகத்தைச் சென்றடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040