
சீன பன்னாட்டு ஒப்பந்ததாரர்கள் வணிகச் சங்கம் வழங்கிய புள்ளிவிபரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில், பன்னாட்டு உடன்படிக்கைகள் மூலம் சீனாவின் திட்டப்பணிகள், விரைவாக அதிகரிக்கும் போக்கை நிலைநிறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு, இதன் வர்த்தகத் தொகை 9220 கோடி அமெரிக்க டாலராகும். இது, 2009ம் ஆண்டில் இருந்ததை விட, 18 விழுக்காடு அதிகம். புதியதாக கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கைகளின் மதிப்பு, 13 ஆயிரத்து 440 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, 2009ம் ஆண்டில் இருந்ததை விட 6 விழுக்காடு அதிகம்.
இடர்ப்பாட்டுக் கட்டுப்பாடு என்பது, இவ்வாண்டில் சீனாவின் இத்திட்டப்பணித் துறையில் முக்கிய சொற்களில் ஒன்றாகும் என்று இந்த வணிகச் சங்கத்தின் ஒட்டுமொத்தப் பிரிவின் இயக்குநர் Zhang Xiang அம்மையார் தெரிவித்தார். அண்மையில் இந்த வணிகச் சங்கம் பெய்ஜிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் லிபியாவின் நிலைமை தீவிரமாக மோசமாகியுள்ளது. இந்நாட்டிலுள்ள பல சீனத் தொழில் நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு உடன்படிக்கை திட்டப்பணியில் ஈடுபடும் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு இச்சம்பவம் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இடர்பாட்டுக் கருத்திலும், இடர்பாட்டுக் கட்டுப்பாட்டிலும் உடன்படிக்கைத் திட்டப்பணியில் ஈடுபடும் சீன தொழில் நிறுவனங்ளுக்கு, இது ஓர் எச்சரிக்கை என்று Zhang Xiang அம்மையார் கூறினார்.
2011ம் ஆண்டு, பன்னாட்டு உடன்படிக்கைகள் மூலம் சீனாவின் திட்டப்பணிகளின் அலுவல்களின் தொகை 2010ம் ஆண்டில் இருந்ததை விட குறையாது. ஆனால், இது, 2009ம் ஆண்டுக்கு முந்தைய உயர்வேகமாக அதிகரிக்கும் நிலைமைக்குத் திரும்புவது கடினம் என்று Zhang Xiang அம்மையார் தெரிவித்தார்.
வளரும் நாடுகளின் சந்தை நிலைப்பாடாக இருப்பது, எண்ணெய் விலையின் உயர்வுடன் மூலவளம் நிறைந்த நாடுகளின் நிதி நிலை தொடர்ந்து மேம்படுவது, அடிப்படை வசதிகளுக்கான முதலீடு தொடர்ந்து அதிகரிப்பது, உலகப் பொருளாதாரம் மீட்சியடைவது முதலிய வெளிப்புறக் காரணிகள், பன்னாட்டு உடன்படிக்கைகள் மூலம் சீனாவின் திட்டப்பணிகளுக்குத் துணை புரியும். ஆனால், பிரதேச ரீதியான அரசியல் இடர்பாடு, நாணய மாற்றுவிகிதம், விலை இடர்பாடு முதலிய காரணிகள், சீனாவின் உடன்படிக்கை வணிகர்களைச் சோதனையில் ஆழ்த்தியுள்ளன என்று Zhang Xiang அம்மையார் கூறினார்.