• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐந்தாண்டு திட்டப்பணியை நடைமுறையாக்க யோசனைகள்
  2011-03-03 17:57:26  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியுள்ள சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்தில் தேசிய கமிட்டியின் தலைவர் சியாச்சிங்லின் கமிட்டியின் பணியறிக்கையை வழங்கினார். 12வது ஐந்தாண்டு திட்டம் பற்றி உறுப்பினர்கள் யோசனைகள் மற்றும் கருத்துருக்களை முன்வைப்பது கடந்த ஓராண்டின் தேசிய கமிட்டியின் முக்கிய பணியும் அடுத்த ஆண்டின் மையக் கடமையும் ஆகும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
 
இது பற்றி சியாச்சிங்லின் கூறியதாவது. மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினர்கள் இந்த ஐந்தாண்டு திட்டம் பற்றி யோசனை தெரிவிப்பது ஜனநாயகத்தை வெளிக்கொணர்ந்து அறிவியல் முறையில் கொள்கைத் தீர்மானத்தை முன்னேற்றுவதன் நடைமுறையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தாங்கள் ஈடுபடும் தொழில் அல்லது துறையை 12வது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்றும் போது மேலும் செவ்வனே வளரச் செய்வது உறுப்பினர்களை பொறுத்தவரை சிந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவருமான wang wen biao அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி அவர் கூறியதாவது. சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் போது மாபெரும் பங்கு ஆற்றியுள்ளன. அவை பெற்றுள்ள உற்பத்தி மதிப்பு உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 60 விழுக்காட்டுக்கு மேல் வகித்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் விகிதம் 91 விழுக்காட்டை எட்டியது. பாரம்பரிய தொழிலிருந்து நவீன தொழிலாக மாறுவதென்ற பிரச்சினை தொழில் நிறுவனங்களில் பொதுவாக நிலவியுள்ளது. தொழில் நுட்பப் புத்தாக்கம், அமைப்பு முறையின் சீர்திருத்தம், கொள்கை புத்தாக்கம் ஆகியவை அவற்றுக்குத் தேவை என்று அவர் கூறினார்.
 
மார்ச் 2ம் நாள் வரை நடப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட 700க்கும் அதிகமான கருத்துருக்கள் கிடைத்தன. தலைவர் சியாச்சிங்லின் பொது மக்களின் பணி பற்றி கூறியதாவது. மக்கள் அக்கறை காட்டும் தகவல்களை சேகரிக்கும் வழிகள் எப்போதும் தடையின்றி இருக்க வேண்டும். இணையதளத்தின் மூலம் மக்களின் கருத்துக்களை பெறும் புதிய வழிமுறையை ஆக்கமுடன் ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுக்குத் தகவல்களை சேகரித்து பகுதாராயும் அமைப்பு முறையாக உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040