
சிறப்பு அழைப்புப் பெற்ற ஹைநான் மாநில உறுப்பினர் feng chuan jian கூறியதாவது. புத்தாண்டில் உணவுப் பொருட்களின் பாதுகாப்பில் கண்காணிப்பு தேவை. மகிழ்ச்சி குறியீடு பற்றி குறிப்பிடும் போது பொருளாதாரம் தவிர, நல வாழ்வும் மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
இது பற்றி பண்பாட்டுத் துறையை சேர்ந்த இம்மாநாட்டின் உறுப்பினர் cui yong nian நகைச்சுவையோடு உணவுப் பொருட்களின் பாதுகாப்பு தொடர்பான கண்டிப்பான வரையறையை விளக்கி கூறினார். அவர் கூறியதாவது. பன்றியிறைச்சிக்கு ஏற்றதாய் பன்றிறைச்சி பற்றிய வரையறை இருக்க வேண்டும். பாலுக்கு ஏற்றதாய் பால் வரையறை இருக்க வேண்டும். வெவ்வேறான உணவுப் பொருட்களுக்கு ஏற்ற தகுந்த வரையறைகள் இருக்க வேண்டும் என்றார் அவர்.
தற்போது சமூகத்துக்குத் தேவைப்படும் திறமைசாலிகள் பல்வகை அறிவுபுலமை பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகள் வேலை பெறுவதில் மேலும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது பற்றி மாநாட்டின் உறுப்பினர் lin jia ju கூறியதாவது. தற்போது பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவது பற்றி மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் சிறந்த மனநிறைவை தரவில்லை. கல்வி கற்பிக்கும் அணுகுமுறையில் தத்துவத்தற்கு முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை நியமிக்கும் போது தொழில் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களை சேர்க்க விரும்புகின்றனர். ஏனென்றால் இந்த பட்டதாரிகளுக்கு பணியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளும் திறமை அதிகம் என்றார் அவர்.
தற்போது இணையதளத்தின் வளர்ச்சியுடன் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி இணையப் பயன்பாட்டாளர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள துவங்கியுள்ளனர். மென்மேலும் அதிகமான உறுப்பினர்கள் தங்களது microbloggingஅதாவது குறும் வலைப்பூவில் கருத்துக்களை பதிவு செய்து திறந்த மனதுடன் மக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை சேகரிக்கிறார்கள். குறும் வலைப்பூ மூலம் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துவது மக்கள் கவனம் செலுத்தும் புதிய முறையாகும்.