• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசின் முக்கிய பணியான மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது
  2011-03-05 15:03:45  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 5ம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசவையின் சார்பில் பிரதிநிதிகளுக்கு அரசுப் பணியறிக்கையை வழங்கினார். சீன மக்களைப் பொறுத்தவரை நடப்பு கூட்டத் தொடர் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த ஐந்தாண்டுகால தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திசை தொடர்பான திட்டம் நடப்புக் கூட்டத் தொடரில் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் சீன அரசுக்கு ஆட்சி எண்ணம் என்ன, நடைமுறையாக்கத்தின் துவக்கத்தில் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது, சொந்த வளர்ச்சி சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைமையை எதிர்நோக்கும் வேளையில் முக்கிய நெடுநோக்கு வாய்ப்பை எவ்வாறு இறுகப்பற்றி பன்னோக்க தேசிய ஆற்றலை பெரிதும் உயர்த்துவது போன்ற மக்கள் மிகவும் கவனிக்கும் பிரச்சினைகள் பற்றி தலைமை அமைச்சர் வென்சியாபாவ் விளக்கி கூறினார்.
 


 
பொருளாதார வளர்ச்சியைப் புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் சீன பொருளாதார அதிகரிப்பு குறிக்கோள் தரம் மற்றும் பயனை பெரிதும் அதிகரிப்பதன் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக 7 விழுக்காடு அதிகரிப்பது என்பதாகும். 2010ம் ஆண்டின் மதிப்பைக் கணக்கிட்டுப் பார்த்தால் 2015ம் ஆண்டு சீன உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 55 லட்சம் கோடி யுவானைத் தாண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை பன்முகங்களிலும் மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்க வேண்டும் என்று தலைமை அமைச்சர் வென்சியாப் பணியறிக்கை வழங்கிய போது உள்ளார்ந்த கரிசனத்துடன் குறிப்பிட்டார்.
 


தவிரவும், சமூகத்தின் கட்டுமானம் மற்றும் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்வது பற்றி வென்சியாபாவ் அறிக்கை வழங்கும் போது பல இடங்களில் விளக்கிக் கூறினார். பொருளாதாரம் மென்மேலும் வளரும்வேளையில் சமூகக் கட்டுமானத்தை வலுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்வதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
 
மக்கள் வாழ்க்கை தரப் பிரச்சினை அனைத்து பணிகளுடன் தொடர்புடைய அம்சமாகும். குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையால் கல்வி இழந்த அனைத்து குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதை உத்தரவாதம் செய்ய பாடுபட வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலை விலை சீர்திருத்தம் மேற்கொள்ளும் போது போதியளவில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தலைமை அமைச்சர் 3000 பிரதிநிதிகளுக்கு அரசுப் பணியறிக்கை வழங்கிய போது மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040