தற்போது, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், நிலைமை மிகவும் அமைதியாக உள்ளது. சீன எல்லைப் பிரதேசம் மற்றும் சிறுப்பான்மை தேசிய இனப் பிரதேசங்களின் சுற்றுலா வளங்களை மேலும் வெளிநாடுகளில் அதிகமான பரப்புரை செய்ய வேண்டும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் திபெத் பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் அன்னிய மொழிக் கழகத்தின் துணை வேந்தருமான துடண்கசூ எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
தற்போது திபெத்தில் மக்கள் தொகை 29 இலட்சமாகும். கடந்த ஓராண்டில் திபெத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 68 இலட்சத்துக்கும் மேலாகும். இவ்வெண்ணிக்கை திபெத்தின் அமைதியையும் இணக்கத்தையும் முழுமையாக காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.