பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா முதலிய நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி, உலக வணிகத்தின் செழுமையை முன்னேற்றி வருகிறது. அது, குறைந்த வருமானமுடைய நாடுகளிடை வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்தியது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.
கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த வருமானம் பெற்ற நாடுகளுக்கும் Bric நாடுகளுக்குமிடை வர்த்தகத் தொகை 6 மடங்கு அதிகரித்தது. இது, இந்நாடுகளிடை உறவின் ஆதரவு தூணாக மாறியுள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.
Bric நாடுகளின் பொருளாதாரமும் வறிய நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்புகள் அதிகம். இரு தரப்பு வர்த்தகம் தற்போது விரைவாக வளர்ந்து வருகின்ற போக்கை வலுப்படுத்த இது துணை புரியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியது.