• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேலும் பசுமையான பொருளாதாரம் மற்றும் மகிழ்ச்சியூட்டும் வளர்ச்சித் திட்டம்
  2011-03-07 09:59:56  cri எழுத்தின் அளவு:  A A A   

2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையான 12வது ஐந்து ஆண்டுத் திட்டத்தின் வரைவுத் தீர்மானம் குறித்து 11-வது தேசிய மக்கள் பேரவையின் ஏறக்குறைய 3,000 பிரதிநிதிகள் விவாதம் நடத்துகின்றனர். இந்நிலையில், மேலும் பசுமைப் பொருளாதார மற்றும் மகிழ்ச்சி தரும் வளர்ச்சி வழிமுறை வடிவமைக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றத்தை விரைவுப்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வளர்ச்சிப் பயனை அனுபவிக்க பொது மக்களுக்கு துணைபுரிய வேண்டுமென சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அலுவலர் ஒருவர் 6ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீனாவின் பொது மக்கள் பலரை பொறுத்த வரை, பொருட்களின் இணையம் என்பது, ஒரு புதிய சொல். இது தொடர்பான ஆய்வுத் துறையில் ஈடுபடுகின்ற வாங் ஜிங் அம்மையார் குறிப்பிடுகையில், தூய்மை பொருளாதாரத்தை மற்றும் புதிதாக வளர்ச்சியடையும் தொழிற்துறைகளை நாடு பெரிதும் வளர்க்கும் அதேவேளை, என்னுடைய நிறுவனம் ஒரு புதிய வளர்ச்சி முறையை கண்டுபிடித்துள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

12வது ஐந்து ஆண்டுத் திட்டத்தில், எமது தொழில் நிறுவனத்துக்கு மிகவும் சிறந்த வளர்ச்சி வாய்ப்பு இருக்கும். இந்த வாய்ப்பை முற்றிலும் பயன்படுத்தி, சீனாவிலுள்ள பொருட்களின் இணையத் துறையில் தலைமை நிறுவனமாகவும், இத்துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகவும் மாறப் பாடுபடுவோம் என்று அவர் பேசினார்.

12வது ஐந்து ஆண்டுத் திட்டம் பற்றிய வரைவு தீர்மானத்தில், எதிர்கால பொருளாதார அதிகரிப்பு வேத்தை குறிப்பிடும் ஒரு கட்டாய இலக்கு முன்வைக்கப்படவில்லை. ஆண்டுக்கு 7விழுக்காடு அதிகரிப்பு வேகம் காணுகின்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே உள்ளது. முன்பு, பல உள்ளூர் அரசுகளும் தங்களது மொத்த உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தை குறைத்திருத்தன. வேகத்திற்கு பதிலாக, தரத்தில் மிகவும் கனவம் செலுத்துவதே, சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய திசையாகும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் குறிப்பிட்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தை குறைக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலவளச் சிக்கனத்தை சீனா வலியுறுத்தும். தூய்மை பொருளாதாரம் தொடர்பான கட்டாய இலக்குகள் மேலும் அதிகமாகவும் கண்டிப்பாகவும் இருக்கும். இதுவே, தனக்கும் உலகிற்கும் சீனா ஏற்க வேண்டிய பொது பொறுப்பு என்று சாங் பிங் குறிப்பிட்டார்.

12வது ஐந்து ஆண்டுத் திட்டத்தில், மக்களின் வாழ்க்கை நிலையை உறுதி செய்து மேம்படுத்தும் பணி, இத்திட்டத்தின் துவக்கமாகவும் இறுதி இலக்காகவும் இருக்கும் என்ற கண்ணோட்டம் சேர்க்கப்படுகிறது. அடிப்படை பொது சேவை அமைப்பை முழுமைப்படுத்தும் கருத்து இதில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கு அல்லது மேற்கு பகுதியிலும், கிராமப்புறம் அல்லது நகரத்திலும் வாழும் பொது மக்களை பொறுத்தவரை, அரசு ஒரே நிலை பொது சேவை வழங்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் சு சியான் பிங் கூறினார்.

தேசிய மக்கள் பேரவையில் பரிசீலனை செய்யப்பட்டு மேலும் திருத்தம் செய்யப்பட்ட பின், 12வது ஐந்து ஆண்டு திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். சாங் பிங் மேலும் பேசியபோது

மக்களுக்கு மேலும் தூய்மையான சுற்றுச்சூழலை வழங்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எமது நோக்கமாகும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040