7ம் நாள் காலை, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் yang jie chi சீன வெளியுறவுப் பணியின் முக்கிய அம்சங்களை வெளியிட்டார்.
முன்னதாக இந்த கூட்டத் தொடரின் துவக்க விழாவில் சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், சீன அரசின் பணியறிக்கையை வெளியிட்டு, சீன தூதாண்மைக் கொள்கையையும், வெளியுறவுப்பணியையும் விளக்கிக் கூறினார். சீன அரசும் மக்களும் சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து அறை கூவல்களை கூட்டாக சமாளித்து, வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்த கொள்ள வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது—
முக்கிய நாடுகளுடனான உறவின் வளர்ச்சியை நாம் பேணிக்காக்க வேண்டும். அண்டை நாடுகளுடனான நட்பு ஒத்துழைப்புறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் வென் ச்சியா பாவ்.
இது குறித்து 7ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவுப் பணியின் வளர்ச்சியை பற்றி yang jie chi விளக்கிக் கூறினார். அவர் கூறியதாவது—
சீரான கருத்துக்களையும் செயல்களையும் மேற்கொண்டு, தலைவர்களின் தூதாண்மை நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு, வெவ்வேறு நாடுகளுக்கு பொருத்தமான வேறுபட்ட கொள்கை அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் தூதாண்மை கட்டுக்கோப்பு உருவாக்கப்படும் என்றார் yang jie chi.
BRIC நாடுகள், வளர்ந்த நாடுகளுடனான உறவு, போட்டியுறவு அல்ல. இவ்வுறவு, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாகும். தெற்கு-வடக்கு ஒத்துழைப்பின் பாலமாகும். இவ்வாண்டு எப்ரல் திங்களில், BRIC நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஹெய் நான் மாநிலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று BRIC என்ற நாடுகள், இதர நாடுகளுடனான உறவு குறித்து, yang jie chi வலியுறுத்தினார்.
பெரிய நாடுகள், அண்டை நாடுகள், வளரும் நாடுகள் ஆகிய பல தரப்பட்ட நாடுகளுக்கும் சீனாவுக்குமிடையிலான உறவு மற்றும் பலத்தரப்பு தூதாண்மையில் சீனாவின் கொள்கையை அவர் விளக்கிக் கூறினார். தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது. சில பிரச்சினைகள் குறித்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் வேற்றுமை இருக்கின்றது. இந்த வேற்றுமையை சரியாக கையாள வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்க வேண்டும் என்று சீன-அமெரிக்க உறவு பற்றி குறிப்படுகையில் yang jie chi தெரிவித்தார்.