
சோஷலிய ஜனநாயக அமைப்புமுறை சட்ட வடிவமாக உருவாகியது. இது தலைவர்களின் மாறுவதால் மாறிவிடப் போவதில்லை. தலைவர்கள் வேறுபட்ட கருத்துக்களாலும் மாறப் போவதில்லை. சட்டத்தின் படி நிர்வாகம் செய்ய இது உதவும் என்று அவர் கூறினார்.
1982ம் ஆண்டு சீனாவின் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டத்தில் குடிமக்களின் உரிமை என்ற அத்தியாயம் முதன்முதலாக அரசு வாரியம் என்ற அத்தியாயத்துக்கும் முன்னதாக வைக்கப்பட்டது. அரசின் உரிமை மக்களிடமிருந்து வருகிறது என்ற கருத்தின் பரவலை இது காட்டுகின்றது. மேலும், மனித உரிமைக்கு அரசு மதிப்பளித்து பேணிக்காக்கின்றது என்ற வாக்கியம் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இதர சட்டங்கள் உருவாகியுள்ளன. சீனச் சமூக அறிவியல் கழகத்தின் சட்டவியல் ஆய்வகத்தின் தலைவர் லீ லின் கூறியதாவது
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு மக்களின் உரிமைகளைப் பேணிக்காப்பதற்கு மென்மேலும் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது ஒப்பந்தச் சட்டம், பொருள் உரிமைச் சட்டம் முதலியவற்றில் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
தவிர, சட்ட விதிகளின் உருவாக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணியில் பங்கெடுக்க மக்கள் வரவேற்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, 2008ம் ஆண்டு டிசம்பர் திங்கள் சமூகக் காப்புறுதி சட்ட வரைவு வெளியிடப்பட்டது. அது பற்றி பல்வேறு வட்டாரங்ளிலிருந்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்மொழிவுகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில், அரசின் அதிகாரத்தை முறைப்படுத்தி கட்டுப்படுத்துவதும் குடிமக்களின் உரிமையையும் நலனையும் பேணிக்காக்கும் சட்ட விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சட்ட அமைப்புமுறையை மேலும் மேம்படுத்த சீனா தொடர்ந்து பாடுபடும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ கூறினார்.