• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றம்
  2011-03-11 16:40:21  cri எழுத்தின் அளவு:  A A A   

பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றங்களை விரைவுப்படுத்துவது, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்தொடரில் கலந்துகொள்கின்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துகிற முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. கண்மூடித்தனமாக விரிவடைய செய்வதன் மூலமும், பெருமளவான எரியாற்றலையும் மூலவளங்களையும் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றக் கூடாது. பொருளாதார வளர்ச்சியில் தரத்தை முன்னேற்றுவது, உறுப்பினர் பலரின் பொதுக் கருத்தாக மாறியது.

ஆண்டுதோறும், வசந்த விழாவுக்கு பிறகு, தொழில் நிறுவனங்கள், பல முன்பதிவுப் படிவங்களைப் பெறும். ஆனால், அக்காலத்தில் உழைப்பாளர்களை சேர்ப்பது, தொழில் நிறுவனங்களுக்கு கடினமான பணியாகும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டி உறுப்பினர் chen zhi lie கூறியதாவது—

தென்கிழக்கு கடலோரப் பிரதேசத்தில், உழைப்பாளரைச் சேர்ப்பது கடினம் என்ற நிலைமை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. உடல் உழைப்பை வழங்குவது மட்டும், புதிய தலைமுறை விவசாய உழைப்பாளரை நிறைவு செய்யாது என்பதை இது வெளிக்காட்டியது. இனிமேல், தொழில் நுட்ப பயிற்சி இல்லாமல் பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து விடும். சீன தொழில் நிறுவனங்கள் உழைப்பாளரின் வருமானம், தொழில் நுட்பம் முதலியவற்றை இது துணை புரியும் என்றார் chen li lie.

தொழில் நிறுவனங்கள் உழைப்பாளரை சேர்ப்பது பற்றிய கருத்துருவை சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் li shu fu வெளியிட்டார். அவர் கூறியதாவது—

பணியாளரின் சட்டப்பூர்வமான உரிமையை பேணிக்காப்பது, அவர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமுடன் தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள உதவி புரிய வேண்டும் என்றார் அவர்.

அடுத்த 5 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வழிமுறை, வேகமான வளர்ச்சியிலிருந்து மிதமான உறுதியான வளர்ச்சியாக தொடரும். தற்போது சீன அரசு வெளியிட்டுள்ள 12வது 5 ஆண்டு திட்டத்தில், தேசிய பொருளாதார வளர்ச்சி வேகம், 7 விழுக்காடாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 12வது 5 ஆண்டு திட்டக்காலத்தில், சீன பொருளாதார வளர்ச்சியின் நோக்கம், வேகம், பெரியளவு இருக்க வேண்டியதல்ல என்பதை இது வெளிக்காடுகிறது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பொருளாதார ஆணையத்தின் துணைத் தலைவர் li de shui சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040