
இவ்வாண்டு குளிர்காலக் கோதுமையும் கோடைக்காலத் தானியமும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படாது. வறட்சி எதிர்ப்பில் ஊன்றி நிற்பதாலும், வசந்தகாலத்தில் பயிர் மேலாண்மையை மேற்கொண்டதாலும், இவ்வாண்டு கோடைக்காலத் தானியம் அமோக விளைச்சல் பெறும் என்று சீனத் துணை வேளாண் அமைச்சர் wei chao an 12ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். இவ்வாண்டு, 50 கோடி டன்னுக்கு மேலான மொத்த தானிய விளைச்சலைச் சீனா நிலைநிறுத்தும். விவசாயிகள் 7 விழுக்காட்டுக்கு மேலான வருமான அதிகரிப்பை பெறுவர் என்று wei chao an கூறினார்.