சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4ம் கூட்டத்தொடரின் நிறைவுக்கூட்டம் 13ம் நாள் காலை 9 மணிக்கு பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் இக்கமிட்டித் தலைவர் ஜியாச்சிங்லின் உரை நிகழ்த்தினார்.
3ம் நாள் தொடங்கிய நடப்புக் கூட்டத்தொடரில், பல்வேறு கட்சிப்பிரிவுகள், குழுக்கள், பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உறுப்பினர்கள் 12வது ஐந்தாண்டுத் திட்டவரைவு பற்றியும், மக்கள் வாழ்வு தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளை பற்றியும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.