Brics நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு
2011-03-22 18:37:58 cri எழுத்தின் அளவு: A A A
Brics நாடுகளின் தலைவர்களின் 3வது சந்திப்பு எப்ரல் திங்களில் சீனாவின் ஹெய்நான் மாநிலத்தில் நடைபெறும். இந்நாடுகள் ஜனநாயகமான மற்றும் வெளிப்படையான கோற்பாட்டின்படி கலந்தாய்வை வலுப்படுத்தி இந்தக் கூட்டம் சாதனையைப் பெறுவதை முன்னேற்றும். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ அம்மையார் 22ம் நாள் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கூட்டம் மூலம், Brics நாடுகளிடை தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டுமென சீனா விரும்புகிறது. பொது ஆர்வம் வாய்ந்த பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகள் குறித்து இந்நாடுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, உலக பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்காற்றுவதை முன்னேற்ற வேண்டுமென சீனா விரும்புவதாக ஜியாங் யூ அம்மையார் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்