சீனாவின் யூன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மினில் மின்சார மற்றும் மின்சார தொழில் நுட்ப பொறியியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் 21ம் நாள் நடைபெற்ற பொருட்களின் இணைய புழக்கத் தானியக்க மயமாக்கம், இணையப் பாதுகாப்பு மற்றும் விவேக அமைப்பு முறை தொடர்பான முதலாவது சர்வதேச கூட்டத்தில் யூன்னான் மாநிலத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆணையத்தின் தலைவர் long jiang உரை நிகழ்த்தினார். யூன்னான் மாநிலத்தில் பொருட்கள் ஒன்றிணைக்கப்படுகின்ற இணைய புழக்கத்தை கையாள்வது நிறைவடைய இருக்கின்றது. இதன் பயன்பாட்டின் மூலம் யூன்னானை தென்கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்குச் சேவை புரியும் முன்னேறிய இணைய பொருட்புழக்க மையமாக மாற்றுவோம் என்று அவர் தம் உரையில் தெரிவித்தார்.
பொருட்களின் இணையம் என்றால் தூண்டல் மின்னாக்கிக் கருவி, இருப்புப் பாதை, பாலம், நெடுஞ்சாலை, நீர் பகிர்மானத் தொகுதி, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் முதலியவற்றில் பொருத்தப்பட்ட பின் மனிதர் அவற்றின் இயக்கத்தை மேலும் நுணுக்கமாக நிர்வகிப்பது என்று பொருள்படுகின்றது.