Brics நாடுகளின் 3வது தலைவர்கள் பேச்சுவார்த்தை, ஏப்ரல் திங்கள் 14ம் நாள் சீனாவின் hai nanஇல்லுள்ள san ya நகரில் நடைபெறும். இது குறித்து, சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் கூட்டத்தைச் சீன வெளியுறவு அமைச்சகம் நடத்தியது. எதிர்காலத்தை முன்னாய்வு செய்து, கூட்டாக செழுமையை அனுபவிப்பது, இப்பேச்சுவார்த்தையின் தலைப்பாகும். தற்போதைய சர்வதேச நிலை, சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினை ஆகியவை பற்றிய கருத்துக்களை ஹூசிந்தாவ் முழுமையாக விளக்கிக் கூறுவார். சீனாவின் வளர்ச்சி நிலை குறித்தும் அவர் எடுத்துக்கூறுவார் என்று அறியப்படுகிறது.