
ஐரோப்பிய கடன் நெருக்கடி, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் கொந்தளிப்பான நிலைமை முதலியவை மீதான முதலீட்டாளர்களின் கவலை, இடைவிடாமல் அதிகரிக்கிறது. அத்துடன், ஆபத்து நிகழாமல் தவிர்க்க பயன்படுத்தப்படும் தொகை, 5ம் நாள் சர்வதேச தங்க விலையை உயர்த்துவதில் வரலாற்றுப் பதிவை மீண்டும் உருவாக்கியுள்ளது. ஜூன் திங்களில் தங்க பரிமாற்ற வியபாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1452.5 அமெரிக்க டாலராகும். இது வரலாற்றில் மிக உயர்வாகும்.
வட்டியை அதிகரிப்பது உள்ளிட்ட இறுக்கமான நிதிக் கொள்கைகளினால் ஏற்பட்ட நலன்களை விட, உலகப் பண வீக்கம் மீதான முதலீட்டாளர்களின் கவலை மிகவும் அதிகரிப்பதை, வரலாற்றில் தங்க விலையின் இந்த உயர்வு காட்டுகிறது என்று Peregrine நாணயக் குழுமத்தின் மூத்த தங்க ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.