ஆசியாவின் பல்வேறு நாடுகள் வாய்ப்புகளைக் கூட்டாகப் பயன்படுத்திக் கொண்டு, அறைகூவல்களைச் சமாளித்து, ஆசிய மக்களுக்கு மேலும் இன்பமான வாழ்க்கையைத் தரப் பாடுபட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் 15ம் நாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டுக்கூட்டம், 15ம் நாள் ஹெய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. ஹுசிந்தாவ் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, இணக்கமான ஆசியாவைக் கூட்டாகக் கட்டியமைப்பது, தற்காலத்தில் ஆசிய மக்களின் கூட்டுக் கடமையாகும் என்று அவர் கூறினார்.
அமைதியான வளர்ச்சி என்ற பாதையில் சீனா உறுதியாக நடைபோட்டு, ஆசியாவின் பல்வேறு நாடுகளுடன் சுமுகமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் ஆக்கமுடன் முன்னேற்றி, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை இடைவிடாமல் அதிகரிக்கும். சீனா, ஆசியாவின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரியும் பிரதேசச் சூழலை பேணிக்காக்கப் பாடுபடும் என்றும் ஹூசிந்தாவ் கூறினார்.