2011ம் ஆண்டு சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சி ஏப்ரல் 28ம் நாள் முற்பகல் 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக துவங்கும். அன்று முதல் அக்டோபர் 22ம் நாள் வரையான காலத்தில், இக்கண்காட்சி சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் பயணிகளை வரவேற்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பான வசதியான சிறப்பானப் பயணச் சூழ்நிலையை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம் என்று இக்கண்காட்சியின் இயக்கத்திற்குப் பொறுப்பான நிறுவனம் தெரிவித்தது. அதற்காக கண்காட்சிப் பூங்காவில் மிகப் பெரிய 3 அரங்குகளை பார்வையிட பயணிகள் முன்கூட்டியே பதிவுச் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
அக்டோபர் திங்கள் 22ம் நாள் இக்கண்காட்சி நிறைவடைந்த பின், இப்பூங்கா உள்ளூர் பயணிகளுக்கு தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும்.