"மே 12"வெச்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து 3 ஆண்டுகளாகிவிட்டது. இதை நினைவு கூரும் வகையில் சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதாண்மை அலுவலர்கள் இடம் பெறும் பிரதிநிதிக் குழு beichuan, deyang ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள மறுசீரமைப்பைப் பார்வையிட்டது.
சீனாவிலுள்ள பாகிஸ்தான், ஜப்பான், ஹங்கேரி உள்ளிட்ட 21 நாடுகளின் தூதரகங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. பத்தாம் நாள் முற்பகல் பழைய beichuan மாவட்ட நகரின் சிதிலத்துக்கு பிரதிநிதிகள் சென்று "மே 12"நினைவு தூபியின் முன் அமைதிகாத்து மலர் வளையம் வைத்தனர்.
இந்த பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீனாவுக்கான பாகிஸ்தான் தூதருமான Mullah Mohammad Hassan உரைநிகழ்த்திய போது நிலநடுக்கத்துக்குப் பின் சீனா மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பின் பயனை சர்வதேசச் சமூகம் கண்டு உறுதிப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் பெறப்பட்ட மதிப்புக்குரிய அனுபவங்களை பாகிஸ்தான் கற்றுக் கொள்ளத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார்.