சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தேர்தல்
2011-05-20 19:17:25 cri எழுத்தின் அளவு: A A A
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக ஐயப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Dominique Strauss Kahn பதவி விலகலை அறிவித்த பின், புதிய தலைவரைத் தேரந்தெடுப்பதில் அவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தற்காலிகத் தலைவர் John Lipsky 19ம் நாள் இதை உறுதிப்படுத்தினார்.
வேட்பாளர் பட்டியல் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் விவாதிக்கத் துவங்கியுள்ளன என்று தெரிகிறது.
சர்வதேச அரங்கில் புதிதாக வளர்ச்சி அடையும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமை அதிகரிப்புடன், சர்வதேச நாணய நிதியத்தின் புதியத் தலைவர் அந்த நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக் கூற்றைப் புறக்கணிப்பதற்கில்லை என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர் நிலை நிர்வாகத்தில், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் மாற்றத்தையும் புதிதாக வளர்ச்சி அடையும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று சீன மக்கள் வங்கியின் தலைவர் சோ சியாவ் சுவான் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்