• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு
  2011-05-22 18:45:33  cri எழுத்தின் அளவு:  A A A   

2005ம் ஆண்டு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பன்முகங்களிலும் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புத் திட்டப்பணியைத் துவக்கியது முதல் இதுவரை அதற்கு நடுவண் மற்றும் தன்னாட்சி பிரதேச அரசுகள் முறையே நான்கு கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு தொகையை ஒதுகீடு செய்துள்ளன. இத்தொகையின் 90 விழுக்காடு நடுவண் அரசால் ஒதுக்கப்பட்டது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாட்டு ஆணையம் 22ம் நாள் இதை வெளிப்படுத்தியது.


2010ம் ஆண்டு முதல் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் தொடர்பான முக்கிய திட்டப்பணிகள் தொகுதி தொகுதியாக பன்முகங்களிலும் பாதுகாக்கப்பட துவங்கின. இவ்வாண்டு அதன் இரண்டாவது தொகுதி முக்கிய திட்டப்பணிகளைப் பாதுகாக்கும் பணி நடைமுறைப்படுத்தப்படும் என்று பண்பாட்டு ஆணையத்தின் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டார்.


கசார், திபெத் நாடகம் ஆகியவை திபெத்தின் மனித குலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தவிரவும் 60, அரசு நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் உள்ளன. 222, தன்னாட்சிப் பிரதேச நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. திபெத் பாணி நிறைந்த நடனம், இசை, மருந்து மற்றும் பாரம்பரிய கைவினை தொழில் நுட்பம் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040