சீனாவின் வெளிநாட்டு நாணயச் சொத்து
2011-05-30 14:42:46 cri எழுத்தின் அளவு: A A A
2010ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வெளிநாட்டு நாணயச் சொத்து 4 இலட்சத்து 12 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலராகும். 2009ம் ஆண்டில் இருந்ததை விட இது 19 விழுக்காடு அதிகமாகும். சீனத் தேசிய அந்நிய செலாவணி மேலாண்மை பணியகம் 30ம் நாள் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டுகின்றன.
அதில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 31 ஆயிரத்து 80 கோடி அமெரிக்க டாலராகும். பங்கு பத்திர முதலீட்டுத் தொகை 25 ஆயிரத்து 710 கோடி டாலராகும். இதர துறைகளிலான முதலீட்டுத் தொகை 64 ஆயிரத்து 390 கோடி டாலராகும். கையிருப்பு தொகை 2 இலட்சத்து 91 ஆயிரத்து 420 டாலராகும்.
இதனிடையில், 2010ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் வெளிநாட்டு கடன் தொகை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 540 கோடி அமெரிக்க டாலராகும். இது 2009ம் ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்