
யேமன் தலைநகர் சனாவில் அரசு படைக்கும் எதிர்ப்பு பிரிவுக்குமிடையே மே 31ம் நாள் நிகழ்ந்த மோதலில் குறைந்தது 24பேர் உயிரிழந்தனர். அதில் 4 அப்பாவி மக்கள் அடங்குவர். மேலும், 15 அப்பாவி மக்கள் காயமடைந்தனர்.
யேமனில் மோதல்களால் பாதிப்படையும் பெரும் எண்ணி்ககை, அப்பாவி மக்களின் காயம், உயிர் இழப்பு, வீடுவாசலின்மை ஆகிய பிரச்சினைகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாக, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். அரசுப் படையும் எதிர்ப்பு பிரிவும் உடனடியாக போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்ததார்.




அனுப்புதல்













