சீன தொற்காசிய வர்த்தக கருத்தரங்கு சீனாவின் குன்மிங் நகரில் 5ம் நாள் நடைபெற்றது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், தொழில் மற்றும் வணிகச் சங்கத்தின் தலைவர்கள், வர்த்தக முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆய்வு அறிஞர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். முதலீடு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் துறையில் சீனாவுக்கும் தெற்காசியாவுக்கும் உள்ளார்ந்த வாய்ப்புகள் உள்ளன. வர்த்தக அளவை விரிவாக்கி, அதன் கட்டமைப்பை மேம்படுத்தி, சீன-தெற்காசிய உறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் முன்மொழிந்தனர்.
பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கூட்டு கடமையைச் சீனாவும் தெற்காசிய நாடுகளும் எதிர்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் wu hai long தெரிவித்தார்.
தற்போது, ஊக்கமுள்ள வளர்ச்சியை தெற்காசிய நாடுகள் நாடி வருகின்றன. பிரதேசங்களின் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் ஒத்துழைப்பை ஆதரித்து முன்னேற்றும் வகையில், தொடர்புடைய பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கையைத் தெற்காசியாவும், சீனாவும் வகுக்க வேண்டும் என்று இலங்கை தலைமையமைச்சர் திசநாயக்க எம். ஜெயரெட்ன தெரிவித்தார்.