தலாய்லாமா ஆட்சி புரிந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையிலிருந்து இன்றைய நாகரிகச் சமூகத்துக்குள் திபெத் நுழைந்துள்ளது. திபெத் சமூகத்தில் மாபெரும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி நாடாளுமன்றத்தின் சீன நண்பர் என்ற சங்கத்தின் தலைவரும் செனெட் அவை உறுப்பினருமான ஜியுசிப்பி மென்னார்டி கூறினார்.
திபெத் மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் Nyima Tsering 18ம் நாள் ஜியுசிப்பி மென்னார்டியைச் சந்தித்து பேசினார். அமைதியாக விடுதலை பெற்ற பின், கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தின் வளர்ச்சி பற்றி Nyima Tsering அறிமுகப்படுத்தினார். தாய்நாட்டின் ஒன்றிணைப்பு, தேசிய இன ஒற்றுமை, இணக்க சமூகத்தை கட்டியமைத்தல் முதலியவை திபெத்தில் வாழும் அனைத்து மக்களின் கூட்டு விருப்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முழு மேலை சமூகமும் திபெத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் திபெத்தின் முன்னேற்றங்களை நேரில் கண்டவராக மாற விரும்புவதாகவும் ஜியுசிப்பி மென்னார்டி தெரிவித்தார்.