திபெத் விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம், 13ம் நாள் நேபாளத்திலுள்ள சீன தூதரகத்தில் நடைபெற்றது. நேபாளத்திலுள்ள சுமார் 150 திபெத் உடன்பிறப்புகள் இதிலும் கலந்துகொண்டனர்.
60 ஆண்டுகளுக்கு முன், திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றது. திபெத் வரலாறு, புதிய கட்டத்தில் நுழைந்தது. கடந்த 60 ஆண்டுகாலத்தில், திபெத், அரசியல் ஆக்கப்பணி, பொருளாதார வளர்ச்சி, சமூக வாழ்க்கை, மத நம்பிக்கை சுதந்திர பாதுகாப்பு ஆகிய துறைகளில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று நேபாளத்திற்கான சீன தூதர் yang hou lan தெரிவித்தார்.
நீண்டகாலத்தில், சீன நவீனமயமாக்கம் மற்றும் திபெத் அமைதி வளர்ச்சிக்கு பங்காற்றிய திபெத் உடன்பிறப்புகளுக்கு yang hou lan நன்றி தெரிவித்தார்.