திபெத் அமைதியாக விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு விழா 19ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் கோலாகலமாக நடைபெற்றது. சீனத் துணை அரசுத் தலைவர் ஷீ ச்சிந்பிங் தலைமையிலான நடுவண் அரசின் பிரதிநிதிக் குழு திபெத் மக்களுடன் இவ்விழாவில் கலந்து கொண்டது.
லாசா நகர் முழுவதிலுமுள்ள வீதிகளும் தெருக்களும் விழாக்கோலத்தில் அலங்கரிக்க்ப பட்டிருக்கின்றன. காலை முதல் தேசிய ஆடையை அணிந்த பல்வேறு தேசிய இன மக்கள் ஹாடா எனும் பட்டுத் துணி, மலர் ஆகியவற்றைக் கொண்டு போத்தல மாளிகைக்கு முன்னல் இருக்கும் சதுக்கத்தில் ஆடி பாடி இவ்விழாவைக் கொண்டாடத் துவங்கினர்.
காலை 10 மணியளவில் இவ்விழா அதிகாரப்பூர்வமாக துவங்கியது. சீனாவின் ஐந்து நட்சத்திர செங்கொடி நாட்டுப்பண் ஒலிக்க ஏற்றப்பட்டது. துணை அரசுத் தலைவர் ஷி ச்சிந்பிங் விழாவில் பேசுகையில் திபெத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
திபெத்தில் அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியான வளர்ச்சி கண்ணோட்டத்தை ஆழமாக நடைமுறைப்படுத்தி, ஓரளவு வசதியான சமூகத்தைக் கட்டியமைப்பதற்கு இது தேவையாகும். தொடரவல்ல வளர்ச்சி, தேசிய இன ஒற்றுமை, சமூக அமைதி ஆகியவற்றை நனவாக்குவதற்கு இதுவே தேவை. நாட்டின் ஒன்றிணைப்பையும் தேசியப் பாதுகாப்பையும் பேணிக்காப்பதற்கும் இதுவே தேவை என்று அவர் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளில், திபெத்தில் சமூக அமைப்புமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. சமூகம் மற்றும் பொருளாதாரம் பன்முகங்களிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரமும் பெரிதும் உயர்ந்துள்ளது. பல்வேறு தேசிய இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
திபெத்தின் வேகமான வளர்ச்சி பல்வேறு தேசிய மக்களுக்கு நன்மை பயத்துள்ளது. விழாவில் கலந்துகொண்ட ஒரு திபெத்தியர் கூறியதாவது
தற்போது, எமது வாழ்க்கை சுவையான தேனீரைப் போல் உள்ளது. பாதுகாப்பான வீடு, வசதியான மின்சாரம், சுத்தமான குடிநீர் முதலியவற்றை அனுப்பவிக்கின்றோம். வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தில் இலவச மருத்துவ அமைப்புமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் கட்டாயக் கல்வி பெறுகின்றனர் என்று அவர் கூறினார்.
2020ம் ஆண்டுக்குள் ஓரளவு வசதியான சமூகம் கட்டியமைக்கும் கடமையை திபெத் நிறைவேற்றி, மக்களுக்கு மேலும் இன்பமான வாழ்க்கை வசதியை வழங்க வேண்டும் என்று ஷி ச்சிந்பின் விருப்பம் தெரிவித்தார்.