திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதி விடுதலை பெற்ற 60 ஆண்டுகளில் பல்வேறு தேசிய இன மக்கள் சமமாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து பீடபூமியில் கூட்டுச் செழுமையுடன் வளர்ச்சி அடைய முயற்சி செய்து வருகின்றனர்.
திபெத் அமைதி விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டம் ஜூலை 19ம் நாள் லாசாவின் போதலா மாளிகை சதுக்கத்தில் நடைபெற்றது. சிரென்யாங்சூங் என்னும் திபெத்தின நங்கை ஒருவர் இக்கொண்டாட்ட கூட்டம் நடைபெறுவது குறித்து, மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
நிறைய மலர்கள் அலங்கரிக்கப்பட்ட போதலா மாளிகை சதுக்கம் மிக அழகானது. இந்தக் கொண்டாட்டம், திபெத்தின புத்தாண்டு, தயிர் விழா முதலிய திபெத்தின் பாரம்பரிய விழாக்களின் போது உள்ளது போல், கோலாகலமாகவுள்ளது என்று குறிப்பிட்டார்.
கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 5070 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 1959ம் ஆண்டில் இருந்ததை விட, இது 83 மடங்கு அதிகம். மக்களின் சராசரி ஆயுள் காலம் 67 வயதாக அதிகரித்துள்ளது. இப்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மாநில நிலை ஊழியர்களில் திபெதினம் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் 70 விழுக்காடாக வகிக்கின்றனர்.
34 வயதான சீதான் என்பவர், திபெத்தின ஊழியர் ஆவார். தேசிய இன ஒற்றுமை குறித்து, அவர் ஆழமான உணர்ச்சியைக் கொள்கின்றார். 10 ஆண்டுகளுக்கு மேலான தனது பணிக்காலத்தில் அவர் உள்ளூர் ஹான் இன ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்து வருகின்றார்.
கால்நடை வளர்ப்புத் துறையை முக்கியமாக கொண்ட இந்த மாவட்டத்தில் கல்வி நிலை மிகவும் பின்தங்கியது. ஹான் இன ஊழியர்கள் முன்முயற்சியுடன் பொது மக்களுடன் தொடர்புகொண்டு, திபெத்தின மக்களுடனான உறவுக்கு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கினர் என்று அவர் கூறினார்.
திபெத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், நடுவண் அரசு, 5 முறை திபெத் பணி பற்றிய கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியது. இந்தக் கூட்டங்கள், திபெத்தின் வளர்ச்சியைத் தூண்டும் சிறப்பான முன்னுரிமைக் கொள்கைகளை வகுத்து, திபெத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக முன்னேற்றத்தையும் வலுவாக விரைவுபடுத்தியுள்ளன. மேலும், திபெத்தின மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் உயர்த்தி, பல்வேறு தேசிய இன மக்களின் சமத்துவ மற்றும் தன்னாட்சி உரிமையை உத்தரவாதம் செய்துள்ளன.