இலங்கையின் வளர்ந்துவரும் முதலீட்டு வாய்ப்புகளை மேலதிக சீன முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சீனா மற்றும் இதர நாடுகளின் முதலீட்டாளர்களை கவரக்கூடிய சலுகைகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் தொழில்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 28ம் நாள் இதைத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் வணித்துறையினரை சந்திக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்யவும் உதவும் வகையில் 2012ம் ஆண்டில் சர்வதேச பொருட்காட்சி மற்றும் வணிகக் கருத்தரங்கை இலங்கை நடத்தவுள்ளது. இந்த முக்கிய நடவடிக்கையில், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கவேண்டுமென எதிர்பார்ப்பதாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.
சீன தொழில் நிறுவனங்கள் இலங்கையின் மின்னனுவியல், உள்கட்டுமானம், ஆடைத்தயாரிப்பு, துறைமுகம் மற்றும் நவீன கட்டிடக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.




அனுப்புதல்













