கடன் உச்ச உரம்பை உயர்த்துவதில், அமெரிக்க அரசு பெற்ற முன்னேற்றத்தில் சீனா கவனம் செலுத்துகின்றது. சீனாவின் அன்னியச் செலாவணி சேமிப்பு, பல தரப்பட்ட கொள்கையில் ஊன்றி நின்று, இடர்ப்பாட்டுக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, சீனாவின் மீது, சர்வதேச நாணயச் சந்தையின் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கூடிய அளவில் குறைக்க வேண்டும். அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட 2011ம் ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து, சீன மக்கள் வங்கியின் தலைவர் zhou xiao chuan இவ்வாறு கூறினார்.
கடன் உச்ச வரம்பை உயர்த்துவது மற்றும் நீண்டகாலத்தில் பற்றாக்குறையை குறைப்பது குறித்து அமெரிக்க அரசு முன்னேற்றங்களைப் பெற்றதில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு சீனா வரவேற்பு தெரிவிக்கின்றது. சீன அரசு, நிதானமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று zhou xiao chuan தெரிவித்தார்.




அனுப்புதல்













