அடுத்த 5 ஆண்டுகளில், மாபெரும் பண்பாட்டு வளர்ச்சியையும் செழுமையையும் நனவாக்கும் வகையில், பண்பாட்டுத் தொழிற்துறையின் வளர்ச்சியைத் திபெத் விரைவுபடுத்தும். 2020ம் ஆண்டில், பண்பாட்டுத் தொழிற்துறை, ஆதாரத்தூண் தொழிற்துறையாக மாற, திபெத் பாடுபடும்.
அடுத்த 5 ஆண்டுகளில், பண்பாட்டுத் தொழிற்துறை வளர்ச்சிக்குத் திபெத் நிதி வாரியங்கள் பெருமளவில் ஆதரவு அளிக்கும். 2015ம் ஆண்டு, பண்பாட்டுத் தொழிற்துறை வளர்ச்சிக்கான சிறப்பு நிதித் தொகை, 5 கோடி யுவானாக்கு மேலாக இருக்கும். பொதுப் பண்பாட்டுச் சேவை அமைப்புமுறையை உருவாக்குவது, பண்பாட்டுத் தொழிற்துறை வளர்ச்சியைப் பெரிதும் ஆதரிப்பது, பண்பாட்டு அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது ஆகியவற்றில் திபெத்தின் பல்வேறு தரப்புகள் பெரிதும் நிதி ஆதரவு அளிக்க வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிதிப் பணியகத்தின் தலைவர் ai jun tao கூறினார்.