தற்போது நாள்தோறும், விமானம், தொடர்வண்டி, பேருந்து, சொந்த சீருந்துகள் ஆகியவற்றின் மூலம் திபெத்தில் சுற்றுலா மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 10ஆயிரத்துக்கு மேலாகும். இவ்வாண்டு முற்பாதியில் திபெத்திற்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 22லட்சத்து 50ஆயிரம் ஆகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 24.8விழுக்காடு அதிகமாகும் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகம் அறிவித்தது.
ஷோதோன் விழா, நாம்சு ஏரிச் சர்வதேச நடை விழா உள்ளிட்ட பல நடவடிக்கைகள் வருவதுடன், மேலதிக சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திபெத்திற்கு வருகை தருகின்றனர். இந்த செழுமைக் காலம் சில திங்கள் தொடர்கிறது.