• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் உறவு
  2011-08-16 11:30:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் திங்கள் இறுதியில், பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, முதல் முறையாக சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். சீன வானொலியின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, அரசியல், பொருளாதாரம், ராணுவம், பண்பாடு, விளையாட்டு ஆகிய துறைகளில் சீன-பாகிஸ்தான் உறவை சர்தாரி உயர்வாக பாராட்டினார். சீன வானொலி நிலையம் உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவு குறித்து அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சிங்கியாங் பயணம் குறித்து, மேற்கு பகுதியை வெளி நாட்டுக்குத் திறக்கும் சிங்கியாங்கின் கொள்கைக்கு சர்தாரி வரவேற்பு தெரிவித்தார். பாகிஸ்தான் வடக்குப்பகுதி, சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துடன் இணைந்துள்ளது. பல்வேறு துறைகளில், பாகிஸ்தான் சிங்கியாங் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு உண்டு. சிங்கியாங்கின் வளர்ச்சி, இப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றி, சீன-பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளை அளிக்கும் என்று சர்தாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான், சீனாவின் சிங்கியாங்குடனான பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பின் புதிய வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டுகின்றது. இந்த வளர்ச்சிப் போக்கு, சீனா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இந்த பிரதேசத்திலான வளர்ச்சிக்கும் மேலதிகமான வாய்ப்புகளை அளிக்கும். எனவே, நாங்கள் மகிழ்ச்சிகிறோம் என்று கூறினார்.

ராணுவத்துறையில், சீனாவின் முதல் விமான தாங்கி கப்பலின் முதல் சோதனை பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தது. சர்தாரி சீன ராணுவ வட்டாரத்தின் வளர்ச்சி, பிரதேச அமைதிக்கும் நிதானத்துக்கும் துணை புரியும் என்று குறிப்பிட்டார்.

சீன விமானத் தாங்கி கப்பல் வளர்ச்சி குறித்து பெருமை அடைகிறேன். பிரதேசத்தில் சீனா மிக முக்கியமான நாடாகும். பிரதேச தூதாண்மைக்கு சீனா தலைமை தாங்குகிறது. மற்ற நாடுகளுடன் சீனா மேற்கொள்ளும் பரிமாற்றங்கள், பிரதேச நிலைமையின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்றார் சர்தாரி.

சீன வானொலி நிலையம் ஏற்பாடு செய்த சீன-பாகிஸ்தான் செய்தி ஊடகங்களின் தாய் ஆற்றுப் பயணம் என்ற நடவடிக்கை, சீனாவிலும் பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதில், சர்தாரி மகிழ்ச்சி தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றம் நீண்டகால வரலாற்றை கொண்டது. சீன-பாகிஸ்தான் நட்பு ஆண்டு என்ற வாய்ப்பை பயன்படுத்தி, இரு நாட்டு செய்தி ஊடகங்கள் பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்தாரி விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040