• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மும்பை மக்களின் பார்வையில் பயங்கரவாதம்
  2011-09-05 10:19:53  cri எழுத்தின் அளவு:  A A A   
2001ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ம் நாள் நிகழ்ந்த பயங்கரத் தாக்குதல் சம்பவம் அமெரிக்காவையும் உலக நாடுகளையும் மாற்றி விட்டது என்று குறிப்பிடலாம். 2008ம் ஆண்டு முதல், இந்தியப் பொருளாதார மையமான மும்பையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதில், கடுமையான உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் ஏற்பட்டன. இப்போது, மும்பை மக்களின் வாழ்க்கை எப்படி?பயங்கரவாதம் குறித்த அவர்களின் கருத்துகள் என்ன?
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலான செப்டம்பர் திங்கள் 11ம் நாள் சம்பவத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2 கோடி மக்கள் வாழும் மும்பையில் எமது செய்தியாளர் பயணம் மேற்கொண்டார். Zaveri Bazzar சந்தை, மும்பையிலும் இந்தியாவிலும்  தங்கம் விற்கப்படும் மிக ஆடம்பர சந்தையாகும். எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் இச்சந்தை, பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தும் இடமாக மாறியுள்ளது. 1993ம் ஆண்டிலும் 2003ம் ஆண்டிலும், இச்சந்தையில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாண்டின் ஜூலை 13ம் நாளும், இச்சந்தை, வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானது. மும்பையில், நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பல மக்கள் உயிரிழந்தனர். தும்பம் மிக்க தாக்குதல்களை மக்கள் மறைந்து விடக் கூடாது என்று 63 வயதான வியாபாரி Hufuidகூறினார்.
மும்பையின் தென் பகுதியில் அமைந்த லியோபோல்டு தேனீரகம், மும்பையில் மிக வரவேற்கப்படும் இடங்களில் ஒன்றாகும். காலை 7:30 மணிக்கே, உள்ளூர் மக்களும் வெளிநாட்டு பயணிகளும் இந்த தேனீரகத்தை வந்தடைகின்றனர். 2008ம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ம் நாள் இரவு, இங்கு, பயங்கரவாத தாக்குதல் நிகழந்தது. அதன் வாடிக்கையாளர் Shashank Choudhry கூறியதாவது
 
ஒரு நகரில் வாழ்கின்ற போது, பாதுகாப்புடன் வாழவே விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
வாடிக்கையாளரில் ஒருவரான 31 வயதானSherkhan Sardar Khan கூறியதாவது
 
நான் இந்தியாவை மிகவும் நேசிக்கின்றேன். மும்பையையும் தான். மும்பை, எனது இதயம் போன்றது. இந்தியா, எனது விழிகள் என்று அவர் கூறினார்.
 
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040