பிரிட்டனில் பயணம் மேற்கொண்ட சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பிரதிநிதிக் குழு 7ம் நாள் லண்டனில் பிரிட்டனில் வாழும் சீனர் பிரதிநிதிகளுடன் உரையாடியது. இரு தரப்பு பரிமாற்றத்தையும் தொடர்பையும் அதிகரிப்பது பற்றி அவர்கள் விவாதித்தனர்.
திபெத்தின் மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பு முதலியவற்றின் நிலைமை கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாரம்பரிய திபெத் நாடகம், ஆடல் பாடல் முதலிய கலை நிகழ்ச்சிகள் மூலம் அமைதி விடுதலை பெற்ற கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தில் நிகழ்ந்த தலைகீழான மாற்றங்களை ஐரோப்பிய மக்களுக்கு அறிமுகப்படுத்த திபெத் திட்டமிட்டுள்ளது என்று தெரிய வருகிறது.