9.11 பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் 10ம் நாள் உரைநிகழ்த்தினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்தை உலக மக்கள் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று அவர் கோரினார்.
உலகில் பயங்கரவாத எதிர்ப்பு நெடுநோக்குத் திட்டத்தை 2006ம் ஆண்டு, ஐ.நா ஏற்றுக்கொண்டது. பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய ஐ.நாவின் நெடுநோக்கை பல்வேறு உறுப்பு நாடுகள் உருவாக்குவது இது முதல் முறை. பல்வேறு நாகரிகங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பாலத்தை உருவாக்கி, தீவிரவாதத்தை கூட்டாக எதிர்க்கும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் கொண்டு வருகின்ற அறைகூவலால், உலகிற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீதியைத் தேடி, அமைதியை விரைவுபடுத்துவதில் எல்லா நாடுகளும் பங்கெடுத்து, எதிர்கால தலைமுறையினருக்கு அருமையான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




அனுப்புதல்













