• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியேன்குங் ஒன்று விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
  2011-09-30 09:37:11  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங் நேரப்படி, தியேன்குங் ஒன்று விண்கலம் செப்டம்பர் திங்கள் 29ம் நாள் இரவு 9:16 மணிக்கு ச்சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அது விண்ணில் ஏவப்பட்ட 22 நிமிடங்களுக்குப் பிறகு, ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணிக்குப் பொறுப்பான ஆணையாளர் chang wan கூறியதாவது

தியேன்குங் ஒன்று விண்கலம் அதன் சுற்று வட்டப்பாதையில் சரியாக நுழைந்துள்ளது. தியேன்குங் ஒன்று விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று அறிவிக்கின்றேன் என்றார் அவர்.

இவ்வாண்டுக்குள், தியேன்குங் ஒன்று விண்கலம், shen zhou எட்டு விண்கலத்துடன் விண்வெளியில் இணையும். இது, சீனா நடத்தும் விண்வெளியில் இரண்டு விண்கலன்கள் இணைகின்ற முதலாவது நடவடிக்கையாகும். இது, சீன விண்வெளி நிலையத்தைக் கட்டியமைப்பதற்கு அடிப்படையாகும் என்று ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளர் zhou jian ping கூறினார். அவர் கூறியதாவது.

தியேன்குங் ஒன்று விண்கலம், shen zhou எட்டு விண்கலத்துடன் விண்வெளியில் இணைவது, நமது நாடு சோதனை செய்யும் விண்வெளியில் இருகலன்கள் இணைகின்ற முதலாவது நடவடிக்கையாகும். இது, ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணியின் இரண்டாவது கடமைகளில் இடம்பெறும் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

தியேன்குங் ஒன்று விண்கலம், shen zhou எட்டு விண்கலத்துடன் விண்வெளியில் இணைவதை நிறைவேற்றிய பிறகு, தியேன்குங் ஒன்று விண்கலம், தியேன்குங் ஆய்வு தளமாக மாறும் என்று ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் zhou jian ping கூறினார்.

தற்போது, விண்வெளியில் விண்வெளி ஆய்வகத்தை நிறுவுவதில், சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகியவை, உலகின் மூன்று முக்கிய நாடுகளாகும். சீனாவின் விண்வெளித் தொழிற்துறை பெற்றுள்ள தொழில்நுட்ப முன்னேற்றம், ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி வளர்ச்சிக்கு சிறந்த அடிப்படையை வழங்கியது. ஆட்களை ஏற்றிச்செலும் விண்வெளி லட்சியத்தைச் சீனா வளர்ப்பது, முழு மனித குலத்துக்கு நன்மை பயக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040